பீளமேடு அருகே போர் போடுவதற்காக மரத்தை வெட்டிய கோவை மாநகராட்சி அதிகாரிகள்

கோவை : பீளமேடு அருகே போர் போடும் பணிக்காக சாலையின் ஓரத்தில் இருந்த 6 ஆண்டுகளாகிய மரத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கோவை : பீளமேடு அருகே போர் போடும் பணிக்காக சாலையின் ஓரத்தில் இருந்த 6 ஆண்டுகளாகிய மரத்தை கோவை மாநகராட்சி அதிகாரிகள் வெட்டிய சம்பவம் சமூக ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



பீளமேடு அருகே உள்ள கேப் நீம் லேண்ட் என்ற பகுதியில் கோவை மாநகராட்சியின் சார்பில் தண்ணீர் குழாய் அமைப்பதற்கான போர் போடும் பணி நடைபெற்றது. அப்போது, கோவையைச் சேர்ந்த பயிற்சி மருத்துவரும், வனவிலங்கு புகைப்படக் கலைஞருமான டாக்டர் ஆர். டோல்ஸ்டோய் என்பவர் சாலையின் ஓரத்தில் 6 ஆண்டுகளாகிய புன்னை மரத்தை நடவு செய்து பராமரித்து வந்தார். இந்த போர் போடும் பணிக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி புன்னை மரத்தை அதிகாரிகள் வெட்டியுள்ளனர். எந்தத் தகவலும் தெரிவிக்காமலும், இதுபோன்ற அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயிற்சி மருத்துவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

"6 ஆண்டுகளுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட மரம் 15 அடி உயரத்திற்கு வளர்ந்தது. அதனை கோவை மாநகராட்சி ஊழியர்கள் வெட்டிய சம்பவம் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது," என்றார் டாக்டர் ஆர். டோல்ஸ்டோய்.

உலகம் வெப்பமயமாதலுக்கு காரணமாக இருக்கும் இதுபோன்ற நடவடிக்கைகளை எதிர்காலத்தில் நிகழாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...