உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு வேலை உள்பட அரசின் சலுகைகளில் முன்னுரிமை : கோவையில் சுகாதாரத்துறை அமைச்சர் அறிவிப்பு

கோவை : உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு வேலை உள்பட அரசின் சலுகைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என கோவையில் நடைபெற்ற உலக உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கோவை : உடல் உறுப்பு கொடையாளிகளுக்கு அரசு வேலை உள்பட அரசின் சலுகைகளில் முன்னுரிமை அளிக்கப்படும் என கோவையில் நடைபெற்ற உலக உடல் உறுப்பு தானம் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

நாட்டில் பொன், பொருள், நிலம் ஆகியவையெல்லாம் தானமாக வழங்கப்பட்ட காலம் மாறி, மருத்துவ வரலாற்றில் இரத்த தானம், கண் தானம் என முன்னேறி, தற்போது உடல் உறுப்புகள் தானம் அளிக்கும் அளவுக்கு மருத்துவத் துறை முன்னேறி உள்ளது. இந்த உடல் உறுப்பு தானத்தில் இந்திய அளவில் தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் அரசின் சார்பிலும், தனியார் நிறுவனங்களின் சார்பிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதில், குறிப்பாக உலக உடல் உறுப்பு தான தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டலில் மனிதம் என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் ஒன்று கூடி உலக உடல் உறுப்பு தானம் தின நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ஒருங்கிணைப்பாளர்கள், கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அடைந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் வெற்றிகரமாக கை-மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான ஒளிப்படத்தை திரையிட்டனர்.



இதைத் தொடர்ந்து, உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் மற்றும் உடல் உறுப்புதான விழிப்புணர்வாளர்களுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.



இந்த நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும்போது :- உண்மையான ஹீரோக்களான உடல் உறுப்பு தானம் செய்யும் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட்டுள்ளனர். உடல் உறுப்புகளை தானம் செய்பவரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் அரசின் அரசின் உதவிகளில் முன்னுரிமையும், முக்கியத்துவமும் அளிக்கப்படும். தமிழகம் இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் முன்னிலையில் உள்ளது. இதற்குக் காரணம் இங்கு உள்ள கொடையாளர்களே. இந்த உறுப்பு தானத்தில் 7,568 பேர் மறுவாழ்வு அடைந்துள்ளனர். அதேபோல, தமிழக மக்களுக்கு தமிழக அரசின் விரிவான காப்பீட்டுத் திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

நமது நாட்டில் உடல் உறுப்பு தானத்தில் சிறந்து விளங்கியதற்காக தமிழகத்திற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா அரசுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி, கிடைக்கப்பெற்ற ஏர் ஆம்புலன்ஸ் மூலம் 4,301 உயிரிழப்புகள் தடுக்கப்பட்டுள்ளன, என்றார்.



இதைத்தொடர்ந்து, உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசும்போது :- நம் நாட்டில் 5 லட்சம் நபர்கள் தானத்திற்காக காத்திருக்கின்றனர். தமிழகம் உடல்தானம், இரத்ததானம் உள்ளிட்ட பல தானங்களில் முன்னிலையில் உள்ளது. இதில், கைமாற்று அறுவை சிகிச்சையின் வெற்றியானது தமிழக சுகாதாரத் துறையின் வெற்றியாக உள்ளது. தொடர்ந்து, தமிழக அரசும், சுகாதாரத் துறையும் மக்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. கோவை அரசு மருத்துவமனை மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 286 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவிநாசி சாலையில் 9.5 கி.மீ. தொலைவுடைய மேம்பாலக் கட்டுமானப் பணிகளுக்கான வரைபடம் தயார்நிலையில் உள்ளது. மேலும், கோவை விமான நிலையம் விரிவாக்கப் பணிகளுக்காக ரூ. 200 கோடி விரைவில் வழங்கப்பட இருக்கிறது, என்றார்.



மேலும். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர். டாக்டர் அசோகன் மற்றும் சி.ஐ.ஐ. யின் நிர்வாகிகள், தனியார் மருத்துவமனைகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...