நீலகிரியில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆய்வு : வெள்ள பாதிப்பு குறித்து இரு தினங்களில் அறிக்கை சமர்ப்பிக்க முடிவு

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து இரு தினங்களில் அறிக்கை அளிக்கப்பட்டு முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள், சேதங்கள் குறித்து இரு தினங்களில் அறிக்கை அளிக்கப்பட்டு முழு விவரங்கள் தெரிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டு உள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உதகையில் உள்ள தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். கூட்டத்தை முடித்துக் கொண்டு துணை முதல்வர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது :- சமீப காலத்தில் பெய்த அளவுக்கு மிதமிஞ்சிய மழைப் பொழிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு இருந்த அனைத்து துறையைச் சார்ந்த அலுவலர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் வணக்கம். நம்முடைய நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமான மழைபொழிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து இந்திய வானிலை அறிவிப்பு வந்தவுடன், முதலமைச்சரின் உத்தரவின் பேரில், மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, மழை அதிகமாக பெய்தாலும், அதனால் ஏற்படக்கூடிய உயர் பாதிப்புகள் எதுவும் இல்லாத ஒரு சூழ்நிலை மாவட்ட நிர்வாகம் எடுத்து இருக்கின்றது என்பதை நான் குறிப்பிட்டு கூற கடமைப்பட்டுள்ளேன்.

அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு இருந்த மாவட்ட ஆட்சியர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் அரசின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களோடு இணைந்து பணியாற்றிய பொதுமக்கள் பத்திரிக்கை நண்பர்கள் முழு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நான் இங்கு பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாக சென்று, அதனுடைய பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு என்னென்ன தேவை, தற்காலிகமாக தேவை என்ன, இவையெல்லாம் கணக்கிடப்பட்டு அரசனுடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பேன் என்பதைக் கூறிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட இடங்களில் எல்லாம் பார்த்து பின்னரே செய்தியாளர்களை சந்திக்கின்றேன்.

எந்தெந்த இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது, மழையின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் பின் வழங்கப்பட்ட உதவித் தொகைகள், இதெல்லாம் நான் விளக்கமாக பதில் அளித்து விட்டேன். அதற்கு பிறகும், ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காகத் தான் இவையெல்லாம் கூறிக்கொண்டு இருக்கின்றார். தொடர்ந்து, அரசை குறை கூறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் என்பது நாட்டு மக்களுக்கு தெளிவாக தெரியும். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் துரிதமாக, வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நிலைமையை கண்டறிந்து முழு விவரங்களையும் எடுத்து நாளை அல்லது நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிப்பேன், எனக் கூறினார்.

இதனிடையே, அதிகாரிகள் தரப்பில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 150 கோடி ரூபாய்க்கான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 



முன்னதாக, கூடலூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், நிவாரண உதவி பொருட்கள் வழங்கியதோடு, உடனடியாக பெற்றுக்கொண்ட மனுக்கள் அனைத்திற்கும் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...