கோவை : மழைநீரை சேமிக்க வேண்டிய கட்டாயமான சூழலிலும், அதிகாரிகளின் அலட்சியத்தால் பராமரிப்பின்றி கிடக்கும் வாய்க்கால்களினால், முக்கிய குளங்களின் தண்ணீர் வீணடைந்து வருவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நிலத்தடி நீர்மட்டம் சரிவு மற்றும் கடுமையான தண்ணீர் பஞ்சத்தில் இருந்து மீண்டு வர மழை நீரை சேமிக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக கோவை மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்தது. ஆனால், எதிர்பார்த்த அளவில் எந்தவிதமான குளங்களும், குட்டைகளும் நிரம்பாதது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய நீர்நிலைகளுக்கு பல்வேறு வாய்க்கால்களின் மூலமாக தண்ணீரினை கொண்டு சேர்ப்பது நொய்யல் ஆறு. அப்படிபட்ட நொய்யல் ஆற்றின் வாய்க்கால்களை பராமரிப்பதில் கோவை மாவட்ட நிர்வாகம் தவறி விட்டது. இதனால், கோவை மக்கள் மீண்டும் தண்ணீர் பிரச்சனையை சந்திக்க நேரிடும். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சிம்ப்ளிசிட்டியிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கே. மோகன்ராஜ் கூறுகையில், "அதிகாரிகளின் பராமரிப்பு இல்லாத வாய்க்கால்களினால், மழைக் காலங்களில் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீரைக் கொண்டு சேர்க்கும் நொய்யல் ஆற்று நீர் வீணடைகிறது.

பெரும்பாலான நொய்யல் ஆற்றின் வாய்க்கால்கள் பராமரிப்பு இல்லாமலும், ஆக்கிரமிப்புகளினாலும் பாதிக்கப்பட்டுள்ளன. குளங்கள் மற்றும் ஏ.பி.டி. வாய்க்கால்கள் பொதுத்துறையின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அப்படியிருக்க இந்த குளங்கள் மட்டும் கோவை மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், இதனை கவனிப்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்," என்றார்.

"பொதுவாக குறிச்சி, வெள்ளலூர் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் தேங்கும் தண்ணீர் 30 நாட்களாவது இருக்கும். ஆனால், தற்போது 5 நாட்களிலேயே குறைந்து விடுகிறது. காரணம், குனியமுத்தூர் கால்வாய் சேதமடைந்த நிலையில், பல்வேறு கால்வாய்கள் பராமரிப்பின்றி கிடப்பதே ஆகும். அதேவேளையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை பராமரிக்கவும், அழகுபடுத்தவும் பெரும் தொகையை ஒதுக்கீடு செய்யும் மாநகராட்சி நிர்வாகம், கால்வாய்களை தூய்மைபடுத்த சொற்ப நிதியே ஒதுக்கீடு செய்துள்ளது," என்கிறார் குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஆர். மணிகண்டன்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கால்வாய்க்கள் அனைத்தும் மிகவும் குறுகலானது. 1,000 கனஅடி தண்ணீர் செல்லக் கூடிய நொய்யல் கால்வாய்களில் தற்போது 4,000 கனஅடி நீர் பாய்கிறது," எனக் கூறினார். இதனிடையே, இது தொடர்பாக கருத்து கேட்க பொதுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, அவர்கள் எந்தவித பதிலும் அளிக்கவில்லை.