காஞ்சியில் காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய ஆட்சியர் மீது சட்ட நடவடிக்கைகள் : கோவையில் முன்னாள் காவல்துறை சங்கம்

கோவை : காஞ்சிபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய மாவட்ட ஆட்சியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் காவல்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


கோவை : காஞ்சிபுரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரை தரக்குறைவாக பேசிய மாவட்ட ஆட்சியர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் காவல்துறை சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் காவல்துறை சங்கம் மற்றும் முன்னாள் காவல்துறை அறக்கட்டளை சார்பில் கோவை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் பேசிய அச்சங்கத்தின் தலைவரான ஓய்வுபெற்ற டி.எஸ்.பி. வெள்ளியங்கிரி கூறியதாவது :- காஞ்சிபுரம் அத்திவரதர் கோவிலில் பாதுகாப்பு பணியிலிருந்த ரமேஷ் என்கிற காவல் ஆய்வாளரை, மாவட்ட ஆட்சியர் பொன்னையா பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் தரக்குறைவாக மனிதாபிமற்ற முறையில் பேசியுள்ளார். இந்த செயல் காவலருக்கு ஏற்பட்ட அவமானம் மட்டுமின்றி, பொதுமக்களிடையே காவல்துறை மீது கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக வருந்துகிறோம். காவல் ஆய்வாளர் ரமேஷ் விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்பு கேட்க வேண்டும்.சாதாரண மனிதரைக் கூட பேச முடியாத வார்த்தைகளை சட்டம் ஒழுங்கு பாதுகாக்கும் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் இதுபோன்று பேசுவது அனைவரையும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

மாவட்ட ஆட்சியர் நடந்து கொண்ட விதம் ஆய்வாளர் குடும்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தால் காவல்துறையை சார்ந்தவர்கள் கொதிப்படைந்து உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தங்களது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். சட்ட ரீதியாக பொது நல வழக்கு தொடர உள்ளோம். மேலும், முதலமைச்சர், டி.ஜி.பி. மற்றும் முதன்மை செயலாளர், உயர்நீதிமன்ற நீதிபதிக்கு மனுவாக அளிக்க உள்ளோம். வி.ஐ.பி. பாஸ் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டாலும், ஒருவரை அனுமதிக்கும் உரிமை சட்டப்பூர்வமாகவே அங்கு பணியில் உள்ள ஆய்வாளருக்கு தான் உண்டு. இவ்வாறு சூழ்நிலைக்கேற்ப முடிவு எடுக்கும் காவல்துறை அதிகாரிகளை இப்படி தரக்குறைவாக நடத்தியது கண்டனத்திற்குரியது. இவ்வாறான செயல்களால் பாதிக்கப்படுபவர்கள், காவல்துறையில் பணிபுரிபவர்கள் பாவம் பட்ட ஜென்மங்கள், என்றார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...