செம்பக்கொல்லி பகுதியில் வீடுகளை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை : இழப்பீடு வழங்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை

கூடலூர் : கூடலூர் அருகே உள்ள செம்பக்கொல்லி பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை, அப்பகுதியில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் : கூடலூர் அருகே உள்ள செம்பக்கொல்லி பகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை, அப்பகுதியில் உள்ள வீடுகளை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கூடலூர் தாலுகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி மச்சிக்கொல்லி, ஒற்றவயல், குற்றிமூற்றி, செம்பக்கொல்லி உள்பட பல இடங்களில் காட்டுயானைகள் கூட்டமாக உலா வருகின்றன. இதனால், பலத்த மழையால் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும், அப்பகுதியில் உள்ள விவசாய பயிர்களை காட்டுயானைகள் தின்றும் சேதப்படுத்தி வருகின்றன.



இந்த நிலையில், செம்பக்கொல்லி ஆதிவாசி காலனியில் காட்டுயானை ஒன்று முகாமிட்டு உள்ளது. நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த நஞ்சன் (55) என்பவரது குடிசை வீட்டை சேதப்படுத்தியது. அப்போது, நஞ்சன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டின் மறுபக்கத்தில் பதுங்கி இருந்தனர். மேலும், காட்டு யானை குடிசை வீட்டையும், வீட்டுக்குள் இருந்த பொருட்களையும் நாசம் செய்தது. உடனே பயத்தில் அலறிய அவர்கள், பின்புற வாசல் வழியாக வெளியேறி, உறவினர் வீடுகளில் சென்று தஞ்சம் அடைந்தனர். இதனிடையே, காட்டு யானை குடிசை வீட்டை தரைமட்டமாக்கியது. மேலும், பாத்திரங்கள், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை சேதப்படுத்தியது.

இது குறித்து நஞ்சன் கூறும்போது, "எங்கள் பகுதியில் குட்டிகளுடனும் காட்டுயானைகள் வந்து அட்டகாசம் செய்கின்றன. சேதம் அடைந்த குடிசை வீடு மற்றும் பொருட்களுக்கு உரிய இழப்பீடு தொகையை வனத்துறையினர் வழங்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தார்.

இதேபோன்று, செளுக்காடி பகுதியில் நேற்று காலை 7 மணிக்கு காட்டு யானை ஒன்று புகுந்தது. இதைக் கண்ட அந்த வழியாக வந்த பொதுமக்கள் ஓட்டம் பிடித்தனர். இதைத்தொடர்ந்து, கூடலூர் சாலை வழியாக காட்டு யானை உலா வந்தது. பின்னர், பொதுமக்களுக்கு எந்தவித தொந்தரவும் அளிக்காமல் தேயிலை தோட்டங்கள் வழியாக வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின்னரே பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை சூறையாடி சென்றது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது, எந்த நேரத்தில் காட்டுயானைகள் வருமோ..? என்ற அச்சத்தில் நடமாட வேண்டிய நிலை உள்ளது. வழக்கமாக, இரவில் வரும் காட்டுயானைகள் தற்போது பட்டப்பகலில் வர தொடங்கி விட்டன, என்று வருத்தத்துடன் கூறினர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...