கோவை அரசு மருத்துவமனையில் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு

கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு இன்று திறக்கப்பட்டது.


கோவை : கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு இன்று திறக்கப்பட்டது.



நீமோகாக்கல் தடுப்பூசி மற்றும் இரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவு திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, உலக உறுப்பு தான தினவிழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கான செவிலியர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தப் பேரணியை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



இதனிடையே, செவிலியர் மாணவிகளிடம் அரசின் மருத்துவ திட்டங்கள் குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்விகளை எழுப்பினார். ஆனால், செவிலியர்கள் யாருக்கும் பதில் தெரியாததையடுத்து, செவிலியர் கல்லூரி முதல்வரை வரவழைத்தார். ஆனால், அங்கு வந்த பொறுப்பு முதல்வருக்கும் அமைச்சரின் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை. தொடர்ந்து, கேள்வி எழுப்பியும் பதில் அளிக்காததால் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வர் மீது 17(a) துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- இந்தியாவில் முதல் முறையாக 4 கோடி ரூபாய் மதிப்பில் ஒன்றரை கிலோவிற்கு குறைவான எடை கொண்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை கோவையில் துவங்கியுள்ளோம். இது முற்றிலும் இலவசமான திட்டம். கோவை அரசு மருத்துவமனையில் கேத் லேப் துவக்கி வைத்ததின் மூலம் குறுகிய காலத்தில் 2,750 ஆஞ்சியோகிராம் மற்றும் 150 ஒபன் ஹார்ட் சர்ஜரி செய்துள்ளோம். தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் பல்வேறு சரத்துகளை எதிர்க்கிறோம். தமிழகத்திற்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, நெக்ஸ்ட் தேர்வை தமிழக அரசு எதிர்க்கிறது. நாடு தழுவிய அளவில் தமிழகத்தில் தாய் சேய் இறப்பு விகிதம் மிக குறைவாகியுள்ளது, என்றார்.



Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...