கனமழையால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு தி.மு.க. சார்பில் ரூ. 10 கோடி நிவாரணத் தொகை : ஸ்டாலின் அறிவிப்பு

நீலகிரி : தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ. 10 கோடி நிவாரணத் தொகை அளிக்கப்படுவதாக நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீலகிரி : தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தி.மு.க. சார்பில் ரூ. 10 கோடி நிவாரணத் தொகை அளிக்கப்படுவதாக நீலகிரியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வரலாறு காணாத வகையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் நேரில் பார்வையிட்டார். இந்த நிலையில், 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று முகாமிட்ட அவர், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று, பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். அதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது நீலகிரி எம்.பி. ஆ. ராசா உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.

பின்னர், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- அனைத்து கிராமப்புற சாலைகளிலும் உள்ள ஓரங்களில் நீர் வழித்தடங்கள் சிமெண்ட் சாலைகள் கொண்ட அமைப்பாக அமைத்து, நீர் தங்கு தடையின்றி செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கிராமப்புற மக்களை வெளியேற்றக் கூடாது. அவர்களைத் தொடர்ந்து, முகாம்களில் தங்க வைத்து அவர்களது குடியிருப்பு பகுதிக்குள் சூழ்ந்த வெள்ளத்தை முழுமையாக அப்புறப்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் தான், அவர்களை முகாமை விட்டு வெளியே அனுப்ப வேண்டும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அரசு இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமான மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் சேர்ந்து தி.மு.க. சார்பில் 10 கோடி ரூபாய் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்காக செலவிடப்படும்.

தமிழக அரசு ஒரு சில அமைச்சர்களை அனுப்பி உள்ளது. அவர்கள் வெறும் விளம்பரத்திற்காக புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டு சென்று விட்டனர். மொத்தம் இங்கு 350 கிலோ மீட்டர் சாலைகள் சேதம் அடைந்து உள்ளது. இதில், 150 கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து நேரில் பார்வையிட்டு உள்ளேன். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சாலையில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும், ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவினாலும், மரங்கள் வேருடன் பெயர்ந்ததாலும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலை போக்குவரத்தை துரிதப்படுத்த வேண்டும். கூடலூர், பந்தலூர், உதகை மற்றும் குந்தா ஆகிய பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. எனவே, இந்த பகுதிகளில் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்த வேண்டும். தி.மு.க. தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறது. நான்கு அல்லது ஐந்து நாட்கள் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா இங்கேயே தங்கி இருந்து மீட்பு பணிகள் குறித்தும், அவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும் நேரில் பார்வையிட்டு கழகத் தோழர்களுடன் இணைந்து பணியாற்றுவார்.

அவிநாசி பகுதியில் பட்டா இல்லாத குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வெளியேற்றக் கூடாது. அவர்களுக்கு அந்த பகுதியிலேயே பட்டம் வழங்க வேண்டும். நான் சென்னை சென்ற பின் முதலமைச்சரை சந்தித்து இரண்டு நாள் இங்கு சுற்றுப்பயணம் செய்து நான் சேகரித்த தகவல்கள் அனைத்தையும் அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவேன். அவ்வாறு முதலமைச்சரை சந்திக்க இயலவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து அவர்களிடத்தில் அறிக்கையைக் கொடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துவேன், எனக் கூறினார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...