கோவை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் நீலகிரிக்கு செல்வார் என்றும், ஆனால் நாங்கள் அப்படியல்ல எனகோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை : தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விளம்பரம் தேட ஒருநாள் நீலகிரிக்கு செல்வார் என்றும், ஆனால் நாங்கள் அப்படியல்ல எனகோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது :- நாளை டெல்டா பாசன விவசாயிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க செல்கிறேன். நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழைபாதிப்புகளை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவும், நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டுதேவையான நடவடிக்கை எடுக்க துணை முதலமைச்சர் நீலகிரி செல்கிறார், என்றார்
தொடர்ந்து, கொள்ளிடம் ஆற்றில் முக்கொம்பு அணை உடைந்தது சரி செய்யாமல் இருப்பதால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லுமாஎன்ற கேள்விக்கு இது தவறான கருத்து எனக் கூறிய அவர், கொள்ளிடம் ஆற்றில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் 70 தூண்கள்அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், அங்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் வீண் ஆகமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எனக் கூறினார்.
மேலும், ஸ்டாலினின் நீலகிரி பயணம், காஷ்மீர் விவகாரம் குறித்து முதலமைச்சர் மேலும் கூறியதாவது :- வருவாய் துறை அமைச்சர்பாதிப்பு ஏற்பட்ட மறுநாளே நீலகிரிக்கு சென்று துரிதமாக நிவாரணப் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். ஸ்டாலின் விளம்பரம் தேடஒருநாள் செல்வார். ஆனால், நாங்கள் அப்படியல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணம் அளிப்போம், அரசு துரிதமானநடவடிக்கை எடுத்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிதி ஒதுக்கி தேவையான வசதிகள் செய்து தரப்படும். சேதமதிப்பீட்டை பார்வையிட துணை முதலமைச்சர் ஒபிஎஸ் செல்கிறார். அதன் பின்னர், சேத மதிப்பீடு தெரிந்த பின்னர் மத்திய அரசிடம் நிதிகோர முடியும்.
தி.மு.க. கூட்டணி எந்த நல்லதும் செய்தது இல்லை. நாட்டு மக்களுக்கு நல்ல திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதற்குமாநில அரசு துணை நிற்கிறது. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண பணிகளை அரசு செய்து உள்ளது. ஸ்டாலின்சீன் காட்டுவார், பத்திரிக்கைகளில் பேட்டியளிப்பார். அதோடு முடிந்து விடும், என விமர்சித்தார்.