கோவை : சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக மாற்றியதற்கான சான்றாக, அரிய வகை ஆமைக் குஞ்சுகள் குளப்பகுதியில் தென்பட்ட காட்சிகள் இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக மாற்றியதற்கான சான்றாக, அரிய வகை ஆமைக் குஞ்சுகள் குளப்பகுதியில் தென்பட்ட காட்சிகள் இயற்கை ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நகர்ப்புறங்களில் இருக்கும் சதுப்பு நிலப்பகுதிகளில் முதல்முறையாக தாவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அண்மையில் எடுக்கப்பட்டது. அதன்படி, சிங்காநல்லூர் குளம் பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, குயிப் அமைப்பின் சார்பில் இயற்கை சூழல் குறித்து பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 'நேட்சுரல் டிரெயல்' எனப்படும் இயற்கைச் சுற்றுலா சிங்காநல்லூர் குளத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அப்போது, அங்குள்ள பல்லுயிர்கள் குறித்து வல்லுநர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைக்கின்றனர்.
இந்த வகையில், கடந்த சனிக்கிழமை இயற்கைச் சூழல் நிகழ்ச்சியில் மாணவர்கள் கலந்து கொண்ட போது, இந்தியன் ப்ளாப்ஷெல் என்ற ஒரு வகையான ஆமையின் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவந்தன. இந்தக் காட்சிகள் சிங்காநல்லூர் குளத்தை பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக மாற்றியதற்கான சான்றாக இருப்பதாக தன்னார்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

"3.5 செ.மீ. வரை அகலம் கொண்ட ஒவ்வொரு குஞ்சுகளும் 350 மி.மீ. (35 செ.மீ.) வரை வளரக்கூடியது" என தன்னார்வலர் ஒருவர் கூறினார்.
ஒரு ஆமை ஒரே நேரத்தில் 10-15 வரையிலான முட்டைகளை இடும் என்றும், மண்ணித் தன்மையைப் பொறுத்து 9 முதல் 11 மாதங்கள் அவற்றின் அடைக்காலம் இருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

"சமூக விரோத நடவடிக்கைகள் மூலம் குளத்தின் பாதுகாப்பு தன்மையை குறைத்து மதிப்பிட முயற்சி செய்து வரும் நிலையில், இதுபோன்ற அறிகுறிகள் குளத்தின் பல்லுயிர் பாதுகாப்பபு நடவடிக்கைகளுக்கு மேலும் ஊக்கத்தை அளிக்கிறது," என கூறுகிறார் மற்றொரு தன்னார்வலர்.
இதனிடையே, பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமான சிங்காநல்லூர் குளத்தை சட்டவிரோத செயல்களில் இருந்து பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.