'தலைக்கவசம் உயிர்கவசம்' என்பதை வலியுறுத்தி இந்திய தலைவர்கள் உருவத்தை தலைக்கவசத்தில் ஒட்டி கோவையில் விழிப்புணர்வு

கோவை : தலைக்கவசம் உயிர் கவசம் என்பதனை வலியுறுத்தி இந்திய தலைவர்கள் உருவம் கொண்ட தலை கவசத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தங்க நகை பட்டறை தொழிலாளி மேற்கொண்டு வருகிறார்.

கோவை : தலைக்கவசம் உயிர் கவசம் என்பதனை வலியுறுத்தி இந்திய தலைவர்கள் உருவம் கொண்ட தலை கவசத்துடன் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தங்க நகை பட்டறை தொழிலாளி மேற்கொண்டு வருகிறார். 

கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தங்க நகை பட்டறை தொழிலாளி யு.எம்.டி. ராஜா. இவர், அவ்வப்போது சிறிய அளவு தங்கத்தால் பல்வேறு வடிவங்கள் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டு உள்ளார். சிறிய அளவிலான உலக கோப்பை, எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு எம்.ஜி.ஆர் உருவம் மற்றும் கருணாநிதி உருவம், இயேசுவின் சிலைகளை மூன்று பென்சில்களின் முனையில் வைத்து தேவாலயத்தின் மீது இயேசு இருப்பதைப்போல் வடிமைத்திருந்ததார். 



தற்போது, தலைக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, எனாமல் பெயிண்ட் கொண்டு தேச தலைவர்களின் உருவப்படங்களை தலைகவசத்தில் வரைந்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "நாட்டின் நாளைய தலைவர்கள் இளைஞர்கள் என்பதனை அவர்கள் உணர்ந்து கொள்ள சுபாஷ் சந்திரபோஸ், காந்தி, நேரு, பகத்சிங், டாக்டர். ராதாகிருஷ்ணன், விவேகானந்தர், கோகலே, ராஜாராம், அம்பேத்கர் உள்ளிட்ட 12 தலைவர்களின் உருவங்களுடன் இந்திய வரைபடத்துடன் வரைந்து உள்ளேன். இதனை வரைய இரண்டு நாட்கள் ஆனது. நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப அரசு என்னதான் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டாலும், மக்களிடையே இன்னும் போதுமான விழிப்புணர்வு ஏற்படவில்லை. இளைஞர்கள் பொதுமக்கள் தலைக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற அவசியத்தை வலியுறுத்தி இதனை செய்துள்ளேன், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...