கோவை பத்மநாபன் கோபாலனுக்கு தேசிய இளைஞர் விருது வழங்கி கவுரவிப்பு

கோவை : கோவையைச் சேர்ந்த பத்மநாபன் கோபாலனுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய இளைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

கோவை : கோவையைச் சேர்ந்த பத்மநாபன் கோபாலனுக்கு 2016-17-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய இளைஞர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 

உணவு பொருட்கள் வீணாவதைத் தடுக்கும் விதமாக நோ ஃபுட் வேஸ்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தை கடந்த 2015-ம் ஆண்டு கோவையைச் சேர்ந்த இளம் பட்டதாரி பத்மநாபன் கோபாலன் அறிமுகப்படுத்தினார். இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம், விழாக்கள் மற்றும் விருந்துகளில் மீதமான உணவுப் பொருள்களை பெற்றுக் கொண்டு, உணவின்றி பசித்திருப்பவர்களுக்கு வழங்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில், டெல்லியில் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் திங்கட்கிழமை விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2016-17 ஆம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது பத்மநாபன் கோபாலனுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விருதுடன், பதக்கம், சான்றிதழ்கள் மற்றும ரூ. 50,000 ரொக்கம் வழங்கப்பட்டது.



விருது பெற்றது தொடர்பாக பத்மநாபன் கோபாலன் கூறுகையில், "2016-17-ம் ஆண்டுக்கான நாட்டின் உயரிய விருதான தேசிய இளைஞர் விருதை பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது இளைய சமுதாயத்தினருக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரமாகும். இந்த விருதை அனைத்து தன்னார்வலர்கள், குழுக்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்," எனக் கூறினார். 



கடந்த மார்ச் மாதம் காமன்வெல்த் நிறுவனம் சார்பில் லண்டனில் நடைபெற்ற விழாவில் ஆசியாவின் சிறந்த இளைஞருக்கான விருது பத்மநாபன் கோபாலனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...