கோவை : உலகில் மாறாத மொழியாக தமிழ் மொழி திகழ்ந்து வருவதாக தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவையில் திருச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை புத்தக அறிமுக விழா நடைபெற்றது. புத்தக அறிமுக விழாவிற்கு பின் கவிஞர் வைரமுத்து பேசியதாவது :- கோவை மக்கள் தமிழகத்தில் மிகவும் மாறுபட்டவர்கள். பஞ்சினை நூலாக மாற்றுவது போல புத்தகத்தினையும் நூலாக மாற்றும் மக்கள் கோவை மக்கள். கல்வி, மொழி, தொழில், மருத்துவத்திற்கு என உலகத்தில் பெரிய பெயரினை கோவை எடுத்து வருகிறது. தமிழில் தினமும் பேசினால் மொழிப் புலமையினை பெற்று மிகச்சிறந்த பேச்சாளராக வரமுடியும். தமிழர்கள் மாபெரும் அறிவுத் திறன் படைத்தவர்கள். இந்த அறிவுத்திறனை அனைத்து தமிழர்களும் வெளிக்கொண்டு வரவேண்டும். நான் அதிகமாக நேரத்தினை செலவழித்து கடுமையாக உழைத்து நான்கு வருடம் எழுதிய புத்தகம் தமிழாற்றுப்படை. தமிழர்கள்தான் அதிக வீரம், மரியாதை, மானம் உள்ளவர்கள். ஒவ்வொரு தமிழனும் தமிழுக்கு தொண்டு ஆற்றியவர்களை வணங்க வேண்டும். தமிழை காப்பாற்ற என்ன வழி என்பதை 3,000 வருடங்களுக்கு முன்னர் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. தமிழை வாசிக்க வாசிக்க அதன்மேல் வசியம் கூடும்.

இன்னும் உலகில் மாறாத மொழியாக தமிழ் இருந்து வருகிறது. சில பள்ளிகள் தமிழில் பேசினால் அபராதம் விதிப்போம் என மாணவர்களுக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. இவ்வாறு தமிழில் பேசினால் தண்டிப்போம் என கூறும் நிறுவனங்களை வன்மையாக கண்டிக்கிறேன். தமிழை மொழியாக கருதாமல் தமிழர்களின் அடையாளமாக கருத வேண்டும். நல்ல விசயங்களை மட்டும் சமூக ஊடகங்களில் பகிருங்கள். சொந்த கருத்துக்கள் நல்ல விஷயங்களை கூறும் பொழுது அதை சமூக ஊடகங்கள் தவறாக பரப்பி வருவது சரியானது அல்ல. எவைரமுத்துக்கு ஏற்படும் எதிர்ப்பு தமிழுக்கு ஏற்பட்ட எதிர்ப்பாகும், என்றார்.
வெற்றி தமிழர் பேரவை சார்பில் ஏற்பாடு செய்யபட்ட இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள் மாரியப்பன், முருகன், எம்.என்.சுகுமார், கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, மரபின் மைந்தன் முத்தையா, விஜய் பார்க் இன் தலைவர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.