கோவை : பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கோவையில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்கள் தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கோவையிலும் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டது. கரும்புகடை பகுதியில் உள்ள இஸ்லாமிய பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதே போல், உக்கடம் நல்லாயன் பள்ளி, ஆயிஷா மஹால், பூ மார்கெட் பகுதியில் உள்ள பள்ளி வாசல், மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பள்ளி வாசல் உள்ளிட்ட ஏராளமான இடங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றது. இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் ரமலானுக்கு அடுத்து கொண்டாடும் இரண்டாவதான பெருநாள் பக்ரீத் பண்டிகையாகும். நபிகள்நாயகத்துக்கு முந்தைய இறைதூதர்களில் ஒருவரான இப்ராஹீம் அவர்கள், தவமிருந்து பெற்ற தன் குழந்தையை இறை கட்டளையின்படி பலியிட துணிந்த தியாகத்தை நினைவுகூர்ந்திடும் வகையில்தான் இப்பெருநாள் கொண்டாடப்படுகிறது.

இறையச்சம் இருந்தால்தான் இறையின் கட்டளைகளை நிறைவேற்ற இயலும் என்பதை உணர்த்தும் வகையில், இறைவனுக்குப் பிள்ளையைப் பலியிடும் மாபெரும் தியாகத்தைச் செய்ய துணிந்தார் இறைதூதர் இப்ராஹிம் என்றும், அதனைத் தடுத்து ஆட்டுக்குட்டியைப் பலியிட செய்தார் இறைவன் என்றும் அதனடிப்படையில் காலம் காலமாக இஸ்லாமியர்கள் நினைவுகூர்வதே இப்பண்டிகையாகும்.