கனமழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ போர்கால அடிப்படையில்‌ சீரமைப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றது : அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி தகவல்

கோவை : கனமழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ போர்கால அடிப்படையில்‌ சீரமைப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவை : கனமழையால்‌ பாதிக்கப்பட்ட பகுதிகளில்‌ போர்கால அடிப்படையில்‌ சீரமைப்பு பணிகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி தெரிவித்தார்.

‌கோவை‌ மாவட்டம்‌ கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகின்றது. கனமழையினால்‌ மாவட்டத்தின்‌ பல்வேறு பகுதிகளிலும்‌ ஏற்பட்ட சிறு சிறு பாதிப்புகளும்‌ போர்கால அடிப்படையில்‌ மாவட்ட நிர்வாகத்தின்‌ சார்பில்‌ சீரமைக்கப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று நகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்‌.பி. வேலுமணி‌, தொண்டாத்தூர்‌ ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்மேற்கு பருவமழையால்‌ குடியிருப்புகள்‌ பாதிக்கப்பட்ட மூங்கில்மடைகுட்டை, பச்சினம்பதி ஆகிய பகுதிகளிலும்‌, பெருமாள்கோவில்பதியில்‌ உள்ள முண்டந்துறை அணை அருகில்‌ பாதிப்பிற்குள்ள சிறுபாலத்தினை நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதோடு, கனமழையால்‌ பாதிக்கப்பட்டு, வலையன்குட்டை அரசு துவக்கப்‌ பள்ளி தற்காலிக முகாம்களில்‌ தங்க வைக்கப்பட்டுள்ள 65 நபர்களுக்கு அரிசி, சர்க்கரை, பால்பவுடர்‌, பிஸ்கட்‌, வேட்டி, சேலைகள்‌, தலையணை மற்றும்‌ போர்வைகள்‌ உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை அமைச்சர்‌ வழங்கினார்‌.



இவ்வாய்வின்போது மாவட்ட ஆட்சியர்‌ கு. இராசாமணி, மாவட்ட வன அலுவலர்‌ வெங்கடேஷ்‌, மாவட்ட வருவாய்‌ அலுவலர்‌ ராமதுரைமுருகன்‌, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின்‌ திட்ட இயக்குநர்‌ ரூபன்சங்கர்ராஜ்‌, வருவாய்‌ கோட்டாட்சியர்‌ தனலிங்கம்‌, பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர்‌ ஜெயபிரகாஷ்‌, உதவி இயக்குநர்‌ (பேரூராட்சிகள்‌) துவாரகநாத்சிங்‌, தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய செயற்பொறியாளர்‌ ஆகியோர்‌ இருந்தனர். 

தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம்‌, ஊரக வளர்ச்சி மற்றும்‌ சிறப்புத்திட்டங்கள்‌ செயலாக்கத்துறை அமைச்சர்‌ எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர்‌ தமிழகத்தில்‌ அம்மா அவர்களைப்‌ போலவே, மக்களுக்கு பயன்தரும்‌ வளர்ச்சித் திட்டங்களை சிறப்பான முறையில்‌ செயல்படுத்தி வருகின்றார்கள்‌. இந்திய வானிலை தொடர்பு மையத்தின்‌ மூலம்‌ கனமழை பொழிவு தொடர்பான எச்சரிக்கை வரப்பெற்றவுடனே, கனமழை பொழிவு உள்ள மாவட்டங்களை கண்டறிந்து, அப்பகுதி அமைச்சர்கள்‌ மற்றும்‌ மாவட்ட ஆட்சியர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ குறித்து ஆய்வுக்கூட்டங்கள்‌ வாயிலாக அறிவுறுத்தியிருந்தனர்‌. மேலும்‌, தேசிய மற்றும்‌ மாநில தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்பணிகள்‌ துறையினரையும்‌ தயார்‌ நிலையில்‌ வைத்திருக்க அறிவுறுத்தினர்‌.

அதன்படி, கோவை‌ மாவட்டத்தில்‌ கனமழை பெய்தபோதும்‌ பெரிய அளவில்‌ எங்கும்‌ பாதிப்பு ஏற்படவில்லை. மேலும்‌, கனமழையின்போது சாலையில்‌ தேங்கிய நீரும்‌ போர்கால அடிப்படையில்‌ ஜெனரேட்டர்கள்‌ மற்றும்‌ பெரிய அளவிலான நீர்‌ இரைப்பான்கள்‌ மூலம்‌ நீர்‌ வெளியேற்றப்பட்டு உடனடியாக போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. ஆற்றங்கரையோரம்‌ வெள்ளம்‌ சூழும்‌ பகுதிகளை கண்டறிந்து அங்கு குடியிருக்கும்‌ மக்களை முன்னதாகவே, அருகாமையில்‌ உள்ள பள்ளிக் கட்டிடங்கள்‌, திருமண மண்டபங்கள்‌ மற்றம்‌ பொதுகட்டிடங்களில்‌ தற்காலிக முகாம்கள்‌ அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்‌.



கனமழையின்‌ சூழலை சமாளிக்கவும்‌, அதனால்‌ ஏற்படும்‌பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள்‌ பாதிக்காதவாறு, இயல்புநிலையினை திரும்ப போர்கால நடவடிக்கை மேற்கொள்ளவும்‌, வருவாய்‌ துறையினர்‌, வளர்ச்சித்துறையினர்‌, தீயணைப்பு மற்றும்‌ மீட்புபணிகள்‌ துறையினர்‌ என அனைத்து தரப்பினரையும்‌ ஒருங்கிணைத்து துணை ஆட்சியிர்‌ நிலையில்‌ உள்ள அலுவலர்களின்‌ தலைமையில்‌ வெள்ள பாதிப்பு சீரமைப்பு மற்றும்‌ மீட்புக்குழு அமைக்கப்பட்டு, பல்வேறு துறை அலுவலர்களும்‌ தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்‌. மேலும்‌, தேவைகளுக்கு ஏற்ப மழையால்‌ பாதிப்பிற்குள்ளாகும்‌, சாலைகள்‌, பொதுக்கட்டிடங்கள்‌, பள்ளக்கட்டிடங்கள்‌, பாலங்கள்‌ என அனைத்தினையும்‌ உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது, என அமைச்சர்‌ எஸ்‌.பி.வேலுமணி தெரிவித்தார்‌.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...