மலக்குழி மரணங்களை இனியும் நடைபெற அனுமதிக்கக்கூடாது : துப்புரவு தொழிலாளர்கள் மாநாட்டில் எம்.பி., பி.ஆர்.நடராஜன் பேச்சு

கோவை : மலக்குழியில் இறங்கி விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாகும் சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.

கோவை : மலக்குழியில் இறங்கி விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாகும் சம்பவம் இனியும் தொடராமல் தடுக்க வேண்டும் என துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட மாநாட்டில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தெரிவித்தார்.

சி.ஐ.டி.யு. கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் 13-வது மாநாடு வரதராஜபுரம் சர்க்கரை செட்டியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் சி. பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாநாட்டில் கௌரவ தலைவராக எம்.பி., பி.ஆர். நடராஜனும், தலைவராக சி.பத்மநாபனும், பொதுச்செயலாளராக கே.ரத்தினகுமாரும், பொருளாளராக பி.கணேசன் உள்ளிட்ட 25 பேர் கொண்ட நிர்வாகக்குழு மாநாட்டில் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டை நிறைவு செய்து கோவை நாடாளுமன்ற உறுப்பினரும், சங்கத்தின் கௌரவ தலைவருமான பி.ஆர். நடராஜன் உரையாற்றினார். 



அப்போது அவர் பேசியதாவது :- கோவை மாநகராட்சி தற்போது 100 வார்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால், துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கவில்லை. மக்கள் தொகைக்கு ஏற்ப துப்புரவு தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல், நகரத்தின் தூய்மை எப்படி சாத்தியப்படும். மலைபோல் தேங்கிக்கிடக்கும் குப்பைகள் குறித்து அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினால், துப்புரவு தொழிலாளர்களை கைகாட்டும் நிலை உள்ளது. ஆனால், உண்மையில் தேவைக்கேற்ப இத்தொழிலாளர்களின் எண்ணிக்கையை உயர்த்தாத அதிகாரிகளே சுகாதார சீர்கேட்டிற்கு காரணமாக உள்ளனர். பல ஆண்டுகள் பணிசெய்த துப்புரவு தொழிலாளர்களை நிரந்திரப்படுத்தாமல் ஒப்பந்த கூலிகளாகவே இவர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. இத்தொழிலாளர்களின் அவசியத்தை உணர்ந்து அரசு இவர்களை உடனடியாக நிரந்திரப்பணியாளர்களாக அங்கீகரிக்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரத்தை வழங்க வேண்டும். மலக்குழியில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மலக்குழியில் இறங்கி விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் பலியாவதை ஒரு போதும் ஏற்க முடியாது. மலக்குழி மரணங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும். 

ஊதியம் உள்ளிட்ட பொருளாதார கோரிக்கைகளுக்காக போராடும் நாம் இனி சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்ற தாழ்வுகளுக்கு எதிரான போராட்டத்தை நடத்த வேண்டும். குறிப்பாக, சாதி ஆணவக்கொலை போன்றவை நடைபெறாமல் தடுக்க வலுவான சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை நடத்த வேண்டியது அவசியம். அத்தகைய பாதையை நோக்கி முன்னேறுவோம், என உரையாற்றினார்.

முன்னதாக, மாநாட்டில் ஊராட்சி பணியாளர்களுக்கு, நகராட்சி பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பேரூராட்சி சுய உதவிக்குழு பணியாளர்களுக்கு பி.எப், இ.எஸ்.ஐ. வசதியை செய்து கொடுக்க வேண்டும். நிரந்திர தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் போன்றவற்றை காலதாமதமின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மாநாட்டில் கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தூய்மை தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...