நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 5,034 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு வரலாறு காணாத வகையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகள் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.

அப்போது அவர் பேசியதாவது :- அவலாஞ்சி மற்றும் ஓவேலி பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டி உள்ளது. போர் கால அடிப்படையில் நிவாரண பணிகள் பாதிக்கபட்ட மக்களுக்கு தேவையான அனைத்தும் வழங்கப்படும். கால்நடைகளுக்கு தீவனங்கள் தேவை உள்ளது. அவை உடனடியாக வழங்கப்படும். மொத்தம் 5 குடும்பங்களுக்கு 50 நிவாரணம் லட்சம் வழங்கபட்டது. நடுவட்டம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கப்பட்டது. அவலாஞ்சியில் குடியிருப்புகளுக்கு மாற்று இடம் தேவை என்றால் மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை எடுக்கும், என தெரிவித்தார்
இதனிடையே, கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தினருக்கு கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை இராதாகிருஷ்னன் நிதி உதவிகளை நடுவட்டம் பகுதியில் வழங்கினார்.