பவானி வெள்ள பதிப்பில் சிக்கியவர்களுக்கு ரூ.25 கோடி செலவில் அடுக்குமாடி குடியிருப்பு : அமைச்சர். எஸ்.பி.வேலுமணி

கோவை : பவானி ஆறு கரையோரப் பகுதி மக்களுக்கு அடுத்த முறை வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை : பவானி ஆறு கரையோரப் பகுதி மக்களுக்கு அடுத்த முறை வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்பு அடுக்குமாடி வீடுகள் கட்டி தரப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை மற்றும் வெள்ள நிவாரணப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ஷர்வன்குமார் ஜடாவத், மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். மழை பாதிப்பு மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிவாரணப் பணிகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். 



அப்போது அதிகாரிகள் மத்தியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் மழை அதிகமாக பெய்து, அந்த தண்ணீர் பவானி ஆற்றின் வழியாக பவானி சகார் அணை செல்கின்றது. வழியில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த முறை வெள்ளம் வந்த போதும் கரையோர மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டபோது, மாற்று வீடு கட்டித் தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக 3 ஏக்கர் நிலம் ஏற்கனவே ஒதுக்கி இருந்த நிலையில், தற்போது 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த முறை வெள்ளம் வருவதற்குள் பவானி கரையோர மக்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். மழை நீர் சேகரிப்பில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேகரிப்பு நடைபெறுகின்றதா..? என்பதை அதிகாரிகள் கவனிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பை சரியாக கவனிக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மழை நீர் அனைத்தும் நிலத்தடிக்குள் செல்ல வேண்டும். எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் உள்ள பாலம் பிரச்சினை தொடர்பாக சென்னையில் வரும் புதன் கிழமை கூட்டம் நடக்க இருக்கிறது. அந்த பிரச்சினைக்கு அப்போது தீர்வு காண முடியும், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...