கேரளா : தொடர் கனமழையால் வயநாடு மாவட்டம் மேப்பாடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

வயநாடு மாவட்டம் மேப்பாடி பகுதியில் உள்ள புத்துமலையில் தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு, தமிழகம், கேரளா பகுதிகளை சேர்ந்தவர்கள் எஸ்டேட் தொழிலாளர் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மாலை புத்துமலையில் ஒரு பகுதி சரிந்து, தொழிலாளர் குடியிருப்புகள், கோவில், மசூதி மற்றும் எஸ்டேட் கேன்டீன் மீது விழுந்தது. இவை அனைத்தும் மண்ணிற்கு அடியில் புதையுண்ட நிலையில், 15 பேர் அதில் புதையுண்டனர். தேடுதல் பணியில் இதுவரை 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆசிரா (23), முகம்துநிகித் (4), கார்த்திக் (27), ஐயூப் (44), இப்ராகீம் (38), காலித் (42) ஜினேத் (20) செல்வன் (62) கதிஜா, (42)ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும், பலரது உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.