நீலகிரி வெள்ள பாதிப்பை உடனடியாக தீர்க்க ரானுவ மீட்பு குழுவை அனுப்ப மத்திய அரசுக்கு ஆ.ராசா கடிதம்

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை உடனடியாக தீர்க்க ராணுவ மீட்பு குழுவை அனுப்ப மத்திய அரசிடம் கடிதம் எழுதியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை உடனடியாக தீர்க்க ராணுவ மீட்பு குழுவை அனுப்ப மத்திய அரசிடம் கடிதம் எழுதியுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை தனது முழு கொள்ளளவு எட்டியதால் கடந்த ஒரு வாரமாக அனையில் இருந்து உபரி நீரானது பவானி ஆற்று வெளியேற்றப்பட்டு வருகிறது. சுமார் 88,000 கன அடி தண்ணீர் வரை உபரியாக வெளியேற்றியால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் மேட்டுப்பாளையம், சிறுமுகை பகுதிகளில் ஆற்றின் கரை ஓரத்தில் உள்ள குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்தது. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு கருதி நகர பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கபட்டுள்ளனர். பாதுகாப்பு கருதி 5 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை நீலகிரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரணப் பொருட்களை வழங்கினார். பாய், தலையனை, போர்வைகள், பிஸ்கட், சேலை உள்ளிட்ட பொருட்களை ராசா வழங்கினார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எம்.பி., ஆ .ராசா கூறியதாவது :- நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு கடுமையாக உள்ள நிலையில், அதனை சீரமைக்க போர்க்கால நடவடிக்கை தேவை. எனவே, உடனடியாக பணிகளை முடிக்கி விட ரானுவத்தை மீட்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அது குறித்து உரிய அனுமதி பெற மத்திய ராணுவ அமைச்சருக்கும், உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். மீட்பு பணியினை மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மீட்பு பணிகள் தொய்வு ஏற்படும் பகுதிகளில் கழக தோழர்கள் ஈடுபடுவார்கள். இன்று தமிழக எதிர் கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார், என தெரிவித்தார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...