மழையை சாதகமாக பயன்படுத்தி வனத்தை உருவாக்கும் முயற்சி : மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விதைப்பந்துகள் வீசிய வனத்துறையினர்

கோவை : பருவமழை தீவிரமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விதைப் பரவலுக்காக 10,000 நாட்டு மர விதை பந்துகள் வனத்துறை மூலம் வீசபட்டன.

கோவை : பருவமழை தீவிரமடைந்த நிலையில், மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் விதைப் பரவலுக்காக 10,000 நாட்டு மர விதை பந்துகள் வனத்துறை மூலம் வீசபட்டன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் இந்த மழையால், வனப்பகுதிகளில் உள்ள செடி, கொடிகள் துளிர் விடத் துவங்கியுள்ளன. இந்த நிலையில், இந்த மழையை பயன்படுத்தி வனப்பரப்பளவில் மரங்களை அதிகரிக்கும் நோக்கில், விதைகளை பரப்பும் வகையில் விதை பந்துகள் தயாரிக்கப்பட்டு அவை இன்று மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வீசபட்டன.



மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் தனியார் பங்களிப்புடன் நமது மண்ணிண் நாட்டு மரமான வேப்ப மரங்களின் விதைகளைக் கொண்டு 10,000 விதை பந்துகள் தயாரிக்கப்பட்டன. தயார் செய்த விதை பந்துகள் இன்று கோத்தகிரி சாலையில் உள்ள வனப்பகுதியில் விதைக்கப்பட்டன. மேட்டுப்பாளையம் வனச்சரகர் செல்வராஜ் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பங்கேற்று குறிப்பிட்ட இடைவேளையில் காலியாக உள்ள இடங்களில் இந்த விதை பந்துகளை வீசினர். தற்போது, பெய்து வரும் மழை மற்றும் வடகிழக்கு பருவமழையை நம்பி இந்த விதைப்பந்துகள் வீசபட்டுள்ளதாகவும், தற்போது வீசப்பட்டுள்ள விதைகள் ஆறு மாதங்களில் உயிர் பெற்று வளரும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...