நீலகிரி : தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நீலகிரி : தொடர் மழையால் மலை ரயில் பாதையில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உதகை மலை ரயில் இன்று முதல் மூன்று நாட்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நாள்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கபட்டு வருகிறது. மலைகளின் நடுவே பயணிக்கும் பாரம்பரியமிக்க நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த மலைரயிலில் சென்று இயற்கை அழகினை ரசிக்க உள்நாடுகள் மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் முன்பதிவு செய்து காத்திருந்து மலை ரயிலில் பயணித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு சென்ற மலை ரயில், பாதையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மீண்டும் மேட்டுப்பாளையம் வர இயலாமல் உதகையிலேயே நிறுத்தப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதனிடையே, நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், மேலும் மலை ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மூன்று நாட்களுக்கு மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்கு வரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால், முன்பதிவு செய்து காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.