பில்லூர் அணையின் வெள்ளப் பெருக்கால் மூழ்கிப்போன படகு இல்லம் : மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்பட்டது பரளிக்காடு சூழல் சுற்றுலா

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா மறு தேதி அறிவிக்கப்படாமல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்கப் பகுதியின் கரையோரத்தில் படகு இல்லம் அமைக்கப்பட்டு நடத்தப்படும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது, அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இயற்கையுடன் ஒரு நாள் இணைந்திருக்க விரும்புவோர் பலரும் வனத்துறையிடம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். வார விடுமுறை நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் காட்டின் நடுவே ஓடும் ஆற்றில் பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, பாரஸ்ட் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைக் காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. இதனால், கடந்த 5 நாட்களாக பில்லூர் அணை முழுமையாக நிறைந்து, வரலாறு காணாத வகையில் 88,000 கன அடி தண்ணீர் உபரி நீர் பவானியாற்றில் வெளியேற்றப்பட்டதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, சூழல் சுற்றுலாவின் படகு இல்லப்பகுதி மற்றும் இதன் சுற்றுப்புற இடங்கள் அனைத்தும் நீருக்கடியில் மூழ்கிப்போனது.



சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வந்த பரளிக்காடு பகுதி முழுவதும் தற்போது வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் காரமடை வனத்துறையினர் சூழல் சுற்றுலாவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும், தொடர்ந்து மழை பெய்து வருவதால் எப்போது நீர்வடியும் என தெரியாத காரணத்தினால், மறு தேதி அறிவிக்கும் வரை பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் வனத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...