கனமழையினால் கண்டிவழி குடியிருப்புகளின் மேற்கூரை சேதம் : உதவிக்காக காத்திருக்கும் மலைவாழ் மக்கள்

கோவை : தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் கண்டிவழி மலைக்கிராமத்தின் மேற்கூரைகள் சேதமடைந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர்.

கோவை : தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் கண்டிவழி மலைக்கிராமத்தின் மேற்கூரைகள் சேதமடைந்ததால், உயிருக்கு ஆபத்தான நிலையில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். 



தற்போது பெய்து வரும் தொடர் மழை கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீரை பெருக்கும் விதமாக அமைந்தாலும், கண்டிவழி மலைக்கிராம மக்களின் வாழ்க்கையை சீரழிக்கும் விதமாக உள்ளது. ஆனைகட்டி மலையில் உள்ள இந்த பழங்குடியின கிராமத்தில் 30 ஆண்டுகள் பழமையான வீடுகளில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் பருவமழையின் காரணமாக, 20-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நிலையற்ற இரவு நேரங்களையே கழித்து வருகின்றனர். மேலும், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர். 



"எங்களது கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். இதுபோன்ற இடிந்த வீடுகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வருகிறோம். இன்று தூங்கும் எங்களுக்கு நாளைய விடியல் இருக்கிறதா..? என்பது எங்களுக்கு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது. மிகப்பெரிய அளவில் மழை பெய்தால் எங்களது குடியிருப்புகள் அனைத்தும் இடிந்து விழுந்து விடும்," என்கிறார் கிராமவாசி கே. நாகமணி.

இதனிடையே, இதுபோன்றவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க அரசு ஒதுக்கீடு செய்யும் மானியத் தொகை குறைவானதாக இருப்பதாக அப்பகுதியின் முன்னாள் வார்டு உறுப்பினர் என். பழனிசாமி கூறினார். 



"சாதாரணமாக ஒரு வீடு கட்டுவதற்கு குறைந்தபட்சம் ரூ. 3 லட்சம் ஆகும். ஆனால், அரசு மானியமாக ரூ. 2.1 லட்சம் மட்டுமே வழங்குகிறது. பெரும்பாலான மக்கள் தினக்கூலியாக இருப்பதால் எஞ்சிய தொகையை போட்டு வீடு கட்டிக் கொள்வது என்பது அரிதான காரியமாகும்," என முன்னாள் வார்டு உறுப்பினர் என். பழனிசாமி கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...