கோவை : கோவை மாநகராட்சியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோவை மாநகராட்சியில் பருவமழையின் காரணமாக மழைநீர் வாய்க்கால்களில் நிரம்பி செல்வதால் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத், மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி ஆகியோர் உடனிருந்தார்.
கோவை மாநகராட்சி புட்டுவிக்கி பிரதான சாலையில் பருவமழையின் காரணமாக ராஜவாய்க்கால் பகுதியிலும், நொய்யல் பாலம் பகுதியிலும், சுண்டக்காமுத்தூர் ஆகிய பகுதிகளிலுள்ள நீர்நிலைகளில் மழைநீர் நிரம்பி செல்வதையும், தகுந்த முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் அமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டும் ஆய்வு செய்தார். மேலும், வாய்க்கால்களில் அடைப்புகள் ஏற்படாமல் இருக்கவும், வாய்க்கால்களின் கரையோரம் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்கவும், தேவையான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும், என உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது, மாநகரப் பொறியாளர் ஆ. லட்சுமணன், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் தி.ரா.ரவி மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.