கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் 40 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்து விபத்து : வாகனங்கள் சேதம்

கோவை : மழை காரணமாக கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் இருந்த 40 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்ததில் கார் மற்றும் சரக்கு ஆட்டோ சேதமடைந்துள்ளது.

கோவை : மழை காரணமாக கோவை ப்ரூக் பாண்ட் சாலையில் இருந்த 40 ஆண்டுகள் பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்ததில் கார் மற்றும் சரக்கு ஆட்டோ சேதமடைந்துள்ளது.

பருவ மழை தீவிரமடைந்ததை அடுத்து கோவையில் கடந்த நான்கு நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், சில இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. இந்த நிலையில், இன்று ப்ரூக் பாண்ட் சாலையில் உள்ள பூங்காவில் இருந்த வாகை மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. அப்போது, அவ்வழியாக வந்த கார் மற்றும் சரக்கு ஆட்டோ மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், கார் மற்றும் ஆட்டோவில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 40 ஆண்டு கால பழமையான மரம் சாலையில் விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, சாய்ந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...