கோவை : கோவை மாநகராட்சி கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் பருவமழை முன்னேற்பாடு ஆயத்த பணிகளையொட்டி, மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் மாநகராட்சியின் அலுவலக கட்டிடங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சியின் அனைத்து உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் (பணிகள்) ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் கூறியதாவது :- கோவை மாநகராட்சி பகுதிகளில் தற்பொழுது கனமழை பெய்து வருவதால் மாநகராட்சிக்குச் சொந்தமான அனைத்து கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து ஒருவார காலத்திற்குள் அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள் ஒப்புதலுடன் அறிக்கையினை மாநகரப் பொறியாளர் மூலமாக அனைத்து உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்) மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் (பணிகள்) சமர்ப்பிக்க வேண்டும். கோவை மாநகராட்சி பிரதான அலுவலக நகரமைப்பு பிரிவு மற்றும் அனைத்து மண்டலங்களிலும் உள்ள நகரமைப்பு பிரிவுகளில் நிலுவையிலுள்ள அனைத்து கோப்புகளின் மீது நடவடிக்கை மேற்கொண்டு விரைந்து முடிக்க வேண்டும். மேலும், நகரமைப்பு பிரிவு தொடர்பாக ஒவ்வொரு 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டம் நடத்திட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பணியாற்றிட வேண்டும், என அவர் கூறினார்.