தனியார் கேபிள் நிறுவனம் நடத்துவதாக ஸ்டாலினின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது : அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேட்டி

திருப்பூர் : தனியார் கேபிள் நிறுவனம் நடத்துவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும், அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் : தனியார் கேபிள் நிறுவனம் நடத்துவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சுமத்தும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அமைச்சரும், அரசு கேபிள் வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



திருப்பூர் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு குறித்தும், அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றியும் மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று பார்வையிட்டார். திருப்பூர் மங்கலம் சாலை மற்றும் கல்லூரி சாலையை இணைக்கக்கூடிய அணைப்பாளையம் பகுதியில் உள்ள தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.



பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியதாவது :- திருப்பூர் மற்றும் கோவை மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பொதுமக்கள் எந்த வகையிலும் பாதிக்காத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நொய்யல் கரையோரம் உள்ள பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், உடுமலை சின்னாறு பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் மலைவாழ் குடியிருப்பு மக்கள் ஆற்றை கடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அங்குள்ளவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மேம்பாலம் அமைப்பது குறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உள்ளது. விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என்றார். 

இதனிடையே, அக்க்ஷயா என்னும் தனியார் கேபிள் நிறுவனத்தை நடத்துவதாக ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது :- தமிழக அரசு குறைந்த விலையில் கேபிள் இணைப்புகளை வழங்க இருக்கும் சூழ்நிலையில், அதை பொறுத்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். தற்போது தனியார் கேபிள் உரிமத்திற்கு இணையம் மூலமாகவே உரிமம் பெறப்பட்டு வருவதால், அக்க்ஷயா கேபிள் நிறுவனத்தின் உரிமையாளர் யார் என்பதை அதன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். மேலும், அ.தி.மு.க. ஆட்சி இல்லாத காலத்தில் தமிழகத்தில் கேபிள் யார் கட்டுப்பாட்டில் இருந்தது, எந்த அளவு இருந்தது என்பதையும் ஸ்டாலின் நினைத்துப் பார்க்க வேண்டும், எனக் கூறினார். 

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் குற்றச்சாட்டு குறித்து கேட்டதற்கு, அதற்கு பதிலளிக்க விரும்பவில்லை என அவர் தெரிவித்து விட்டார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...