கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ரூ. 25 கோடி செலவில் அடுக்குமாடி வீடுகள் கட்டித் தரப்படும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி அறிவித்துள்ளார்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கொட்டித் தீர்க்கும் கனமழை காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை இவ்வாண்டு இரண்டு முறை நிரம்பியது. அதன் உபரி நீரானது பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பில்லூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளாக இருக்கக் கூடிய நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்ததால், இதுவரை இல்லாத அளவுக்கு 88,000 கன அடி உபரி நீர் பில்லூர் அணையில் இருந்து திறக்கப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதுடன், ஆற்றின் கரையோரம் உள்ள சாமண்ணா வாட்டர் ஹவுஸ், பவானி ஆற்று பாலம் அருகே உள்ள குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் வருவாய்த்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் உதவியுடன் மீட்கப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். மேலும், பவானி ஆற்றின் நீர்வரத்து குறித்து ஆற்று பாலத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், வெள்ளம் பாதிப்பு முன்னெச்சரிக்கைக்கு வந்துள்ள பேரிடர் மீட்பு குழுவினருடன் ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறியதாவது :- கோவை மாவட்டம் முழுவதும் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 1.700 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதுடன், அசம்பாவிதங்களை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றின் கரை ஓரத்தில் பில்லூர் அணையில் இருந்து மழை காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் காரணமாக, வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதால் ஏற்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அரசு சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ. 25 கோடி செலவில் 350 வீடுகள் அடங்கிய அடிக்குமாடி குடியிருப்புகள் கட்டி தரப்படும், என தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வின் போது, கோவை ஆட்சியர் ராசாமணி மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ், எம்.எல்.ஏ. அருண்குமார், எம்.பி. செல்வராஜ் உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.