கோவை : நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கோவை : நீலகிரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது :- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டிய தமிழக மலை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, தேனி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைப்பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. தென் கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீட்டரும், மேல் பவானியில் 19 செ.மீட்டரும் மழைபெய்துள்ளது, என்றார்.