கோவை : சூலூர் அருகே உள்ள ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப்பாலம் உடனடியாக உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக பெய்த மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில், சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையிலான தரைப்பாலம் மற்றும் சூலூர் அருகே உள்ள ராவுத்தூர் கிராம தரைப்பாலம் ஆகியவை சேதமடைந்தன.

இந்த நிலையில், சூலூர் அருகே உள்ள ராவத்தூர் கிராமத்தில் கனமழையால் சேதமடைந்த நொய்யல் ஆற்றின் பாலத்தை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி மற்றும் உயரதிகாரிகள் உடன் இருந்தனர்
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது :- நீலகிரியில் கடுமையான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை செய்து வருகின்றனர். கோவையிலும் மழை வருவதற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவையில் 275.47 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால், இங்கு சிறிய அளவிலான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டு உள்ளது. மழையினால் கோவை மக்களுக்கு மகிழ்ச்சிதான். 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நொய்யல் ஆற்றில் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. எல்லா வாய்க்கால்களும், குளங்களும் தூர்வாரப்பட்டுள்ளதால் குளங்களில் அதிகமான தண்ணீர் நிரம்பி வருகிறது.
நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததாலும், குளங்களுக்கு செல்லும் பாதை சிறியது என்பதாலும் குளங்கள் மெதுவாக நிரம்பி வருகின்றன. செங்குளத்திற்கு தண்ணீர் வரும் பாதை பாதிப்பு ஏற்பட்டவுடன் உடனடியாக அது சரி செய்யப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் பெய்யும் மழையால் பில்லூர் அணை 97.5 அடி நீர்மட்டம் இருக்கின்றது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்து இருக்கின்றது. கோவையில் உள்ள அனைத்து தடுப்பணைகளும் நிறைந்துள்ளது.
வெள்ள பாதிப்பு காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்காக நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் கருதினாலே, உடனடியாக நிவாரண முகாம்களுக்கு வந்துவிட வேண்டும். கோவை மாவட்டத்தில் 1,335 பேர் 17 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 72 வீடுகள் பாதி சேதமடைந்துள்ளன. 27 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. கோவையில் உள்ள 21 குளங்களில் தண்ணீர் நிரம்பி உள்ளது.

ராவத்தூரில் சேதமடைந்துள்ள நொய்யல் ஆற்றுப் பாலத்தை உயர்மட்ட பாலமாக மாற்றி அமைக்கப்படும். இதை இப்போதே உத்தரவாக பிறப்பிக்கிறேன். சிங்காநல்லூர் - வெள்ளலூர் இடையிலான பாலம் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு செய்தபின் நடவடிக்கை எடுக்கப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் நடப்பதால் கோவையில் உள்ள குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என்பது தவறு. கோவையில் குளக்கரைகளில் நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதுவரை அகற்றப்பட்டு, அவர்களுக்கு மாற்று வீடு வழங்கப்பட்டுள்ளது, என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.