கோவை : தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை முதல் மழை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் தமிழகம் கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மாநிலங்களில் முக்கிய நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில், நாளை முதல் தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம், வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், காற்றழுத்த தாழ்வு உருவானால் 13?ம் தேதி முதல் மீண்டும் மழை அதிகரிக்கலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கக்கடலில் 40 முதல் 50 கி.மீ வரை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.