கோவை மாநகரில் பெய்த மழைக்கு ஒரே நாளில் சரிந்து விழுந்த 9 மரங்கள் : துரிதமாக அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு உதவிய ஊழியர்கள்

கோவை : கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 மரங்கள் சரிந்து விழுந்தன. இவற்றை அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அப்புறப்படுத்தினர்.

கோவை : கடந்த சில நாட்களாக கோவை மாநகரில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 மரங்கள் சரிந்து விழுந்தன. இவற்றை அரசு ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து அப்புறப்படுத்தினர்.



கடந்த வியாழக்கிழமை மட்டும் கோவை மாநகரில் 130 மி.மீ. மழை பதிவாகியது. இதனால், சுங்கம் பைபாஸ் சாலை, வேலாண்டிபாளையம், தடாகம் சாலை, ரேஸ்கோர்ஸ் மற்றும் ரெயின்போ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதனால், அன்றைய தினம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 



இருப்பினும், தொடர் மழையினையும் பொருட்படுத்தாமல், வருவாய்த்துறை, கோவை மாநகராட்சி, தேசிய மற்றும் மாநில போக்குவரத்துத்துறை, பொதுப் பணித்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை, காவல்துறை மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து சாலையில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தினர்.

"பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஒரு சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து சென்று பணியாற்றினோம். சாலைகளில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் சரிந்து விழுந்ததில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு நேற்று முழுவீச்சில் பணியாற்றி மரங்களை அப்புறப்படுத்தினோம். சாய்ந்து விழும் நிலையில் உள்ள மரங்களை வெட்டுமாறு பொதுமக்களுக்கு நாங்கள் இப்போது அறிவுறுத்துகிறோம். ஏனெனில், மரங்கள் சரிந்து விழுந்து, ஏதேனும் பாதிப்புகளை ஏற்படுத்துதற்கு முன்பு, அவற்றை அப்புறப்படுத்துவது சிறந்தது என்ற காரணத்தினால்தான்," என்கிறார் ஓசை அமைப்பின் கே. சையத்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...