பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை : திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்தும், பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கோவை :  திடக்கழிவு மேலாண்மைப் பணிகள் குறித்தும், பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்தும் கோவை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. 



கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையாளர் ச.பிரசன்னா ராமசாமி, நகராட்சி நிர்வாக ஆணையரக கண்காணிப்பு பொறியாளர் டி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் கூறியதாவது :- கோவை மாநகராட்சியில் வீடு வீடாக குப்பைகளை சேகரிக்கும் பணிகளை தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியின் வாகனங்கள் வாயிலாக குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகளாக தரம்பிரித்து பெறுகின்ற பணிகளில் தொய்வில்லாமல் ஈடுபட வேண்டும். பொதுமக்களிடையே இது குறித்து விழிப்புணர்வு பணிகளை அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். குப்பைகளை தரம் பிரித்து வழங்காத வீடுகளுக்கு மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட வேண்டும். 

மேலும், பருவமழையின் காரணமாக பாதிப்புகள் ஏற்படாமல் தகுந்த முன்னேற்பாடு பணிகளை அனைத்து அலுவலர்கள், பொறியாளர்கள் மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சிய குடிநீரை பயன்படுத்த வேண்டும். சாலைகளில் போக்குவரத்து பாதிக்காமல் இருக்க மழையின் காரணமாக மரங்கள் எங்கேனும் சாய்ந்து கிடந்தால், சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்தி பணிகளை மேற்கொள்ள வேண்டும். 

மேலும், வடக்கு மண்டல அலுவலகத்திற்கு 0422-2243133 என்ற எண்ணிற்கும், தெற்கு மண்டலத்திற்கு 0422-2252482 என்ற எண்ணிற்கும், கிழக்கு மண்டலத்திற்கு 0422-2577056, 0422-2572696, என்ற எண்களிலும், மேற்கு மண்டல அலுவலகத்திற்கு 0422-2551700 என்ற எண்ணிற்கும், மத்திய மண்டல அலுவலகத்திற்கு 0422-2215618 என்ற எண்ணிற்கும் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்திற்கு 0422-2302323 என்ற தொலைபேசி எண்ணிற்கும், 8190000200 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிற்கும், 7440422422 என்ற கைப்பேசி எண்ணிற்கும் தொடர்பு கொண்டு மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கலாம். பொதுமக்களின் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட மண்டல உதவி ஆணையாளர்கள் தகுந்த நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறினார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...