கோவை : தனது வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பேட்மேன் திரைப்படம் சிறந்த சமூக படமாக தேர்வு செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக பேட்மேன் முருகானந்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் கூறியதாவது :- இந்த திரைப்படம் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலக முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விருது மேலும் பல இளைஞர்களுக்கு உந்துதலாக அமையும். இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல், வேலைகளைக் கொடுப்பவர்களாக மாற வேண்டும். பெண்களின் மாதவிடாய் பிரச்சனை தொடர்பாக பேசும் இந்தப் படத்தை எடுக்கும் போது, ஆரம்பத்தில் தயக்கம் இருந்தது. ஆனால், திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சியளிக்கிறது. இதுபோன்ற பிரச்சனைகளை இளைஞர்கள் திரைப்படங்களில் தங்களின் கருத்துக்களை துணிந்து பேச பேட்மேன் பட விருது இளைஞர்களுக்கு முன் உதாரணமாகவும், வாய்ப்பாகவும் இருக்கும், என தெரிவித்தார்.