கோவை : கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவை எட்டவுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை நிரம்பி வருகிறது. மொத்தம் 49.53 அடியைக் கொண்ட இந்த அணையின் நீர்மட்டம் தற்போது, 41.98 அடியாக உள்ளது. இன்னும் சில நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதால், அணை அதன் முழு கொள்ளளவை எட்டி விடும் என நம்பப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதிகளில் 350 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, மலை அடிவாரப் பகுதியில் மட்டும் 180 மி.மீ. மழை பெய்துள்ளது.