சொத்து வரி உயர்வு, சூயஸ் திட்டத்தை எதிர்த்து மாபெரும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் : கோவை எம்.பி., பி.ஆர். நடராஜன் எச்சரிக்கை

கோவை : அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை கைவிடாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை திரட்டி மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எச்சரிக்கை விடுத்தார்.

கோவை : அநியாய சொத்துவரி உயர்வு, சூயஸ் குடிநீர் திட்டம் உள்ளிட்டவற்றை கைவிடாவிட்டால் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளை திரட்டி மாபெரும் முழு அடைப்பு போராட்டத்தை நடத்துவோம் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் எச்சரிக்கை விடுத்தார்.  



கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கக்கூடாது, அநியாய சொத்துவரி உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாநகரம் முழுவதும் குண்டும் குழியுமாக உள்ள அனைத்து இணைப்பு சாலைகளையும் சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் தலைமையில் கோவை மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கப்பட்டது. 

இதன் பின்னர், கோவை எம்.பி., பி.ஆ. நடராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனத்திடம் வழங்கியதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. எந்த தொழில்நுட்ப வசதி வாய்ப்பும் இல்லாத காலத்திலேயே நமது ஊழியர்கள் சிறுவாணி பகுதியில் இருந்து குழாய்கள் பதித்து குடிநீரை கோவை மாநகரத்திற்கு கொண்டு வந்துள்ளனர். தற்போது வரை கோவை மாநகராட்சியே மாநகர மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை செய்து வந்துள்ளது. நம்மிடம் பல திறமை மிக்க இளைஞர்கள், ஊழியர்கள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. இந்த நிலையில், நமது கோவை மாநகரத்தின் குடிநீர் விநியோகத்தை அந்நிய நாட்டு சூயஸ் நிறுவனம் வழங்கும் என்ற ஒப்பந்தத்தை கோவை மாநகராட்சி மேற்கொண்டது மோசடியான செயல். 

இது எதிர்காலத்தில் குடிநீருக்கு அந்நியர்களிடம் கையேந்த வைக்கும் என்பது மட்டுமல்லாமல், குடிநீருக்காக ஊதியத்தில் பெரும்பகுதியை செலவழிக்க வேண்டிய அபாயத்தை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தத்தில் பொதுக்குழாய் அகற்றம், குடிநீர் கட்டணம் நிர்ணயிப்பு உள்ளிட்ட மக்களுக்கு எதிரான பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. ஆகவே, இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் குறித்து திறந்த மனதுடன் கலந்துரையாடல் நடத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளோம். இது குறித்து பரிசீலனை செய்வதாக மாநகராட்சி துணை ஆணையர் தெரிவித்துள்ளார். 

இதேபோல, கோவை மாநகராட்சி எப்போதும் இல்லாத வகையில் சொத்து வரி உயர்வு என்பது 50 சதவீதம், 100 சதவீதம் வரை கடுமையாக உயர்த்தியுள்ளது.  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாத நிலையில், அரசு ஆணை என்கிற ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு மாநகர மக்களின் மீது பெரிய சுமையை ஏற்படுத்தியதை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். மேற்கண்ட கோரிக்கைகளை கோவை மாநகராட்சி கைவிடவில்லை எனில், இதனால் ஏற்படும் சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு கோவை மாநகராட்சியே பொறுப்பேற்க வேண்டிய நிலை வரும் என்பதை அதிகாரியிடம் எச்சரித்துள்ளோம். சொத்துவரி உயர்வு, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகம் ஆகியவற்றைக் கண்டித்து பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் திரட்டி கோவையில் முழு அடைப்பு போராட்டத்தை நடத்த உள்ளோம், என அவர் தெரிவித்தார். 

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...