கோவை : தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கமான சைமாவின் 12-வது 'டெக்ஸ்பேர் 2019' கண்காட்சி கோவை கொடீசியா தொழிற்காட்சி வளாகத்தில் இன்று தொடங்கியது.

முன்னதாக இதன் துவக்க விழாவில், மும்பை டெக்ஸோபிரில் தலைவர் டாக்டர் சீனிவாசன் கண்காட்சி மலரை வெளியிட, ஜவுளி பொருட்கள் மற்றும் அதன் சங்கத்தின் தலைவர் அஜய் ஷா அதனைப் பெற்றுக் கொண்டார். இன்று தொடங்கி 4 நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில், ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகம் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களின் சுமார் 320 அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பியா, ஜப்பான், சீன நாடுகளைச் சேர்ந்த ஜவுளி இயந்திர தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர்.

செலவைக் குறைக்கும் தொழில்நுட்பங்களுடன், புதுமையான இயந்திரங்கள், ரோபோட்டிக் வகை என பல்வேறு வகை இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனுடன் இணைந்து 'சைமா பார்ம் டு பினிஷ்' எனும் ஜவுளி பொருட்களின் கண்காட்சியும் இங்கு நடைபெற்று வருகிறது. ஜவுளி நிறுவனங்கள் பஞ்சு, பருத்தி விதை, நுால், துணி, ஆயத்த ஆடை மற்றும் கைத்தறி, விசைத்தறி உரிமையாளர்களுக்கு பயனுள்ளதாக இக்கண்காட்சி இருக்கும் என கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.