கோவை : மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாக்களைக் கண்டித்து கோவையில் உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

என்.ஐ.ஏ., யு.ஏ.பி.ஏ. சட்டங்களில் மாநில சுயாட்சியைப் பறிக்கும் விதமாக சட்ட திருத்தங்கள் மேற்கொண்டதற்கும், காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட 370-30ஏ சிறப்பு சட்டங்களை நீக்கி ஜனநாயக விரோத நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு உள்ளதாகக் கூறி நாடு முழுவதும் மத்திய அரசின் அலுவலகங்கள் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ., மாவட்ட தலைவர் ராஜா உசேன் தலைமையில் ஊர்வலமாக வந்த அக்கட்சியினர், தடுப்புகளை தாண்டி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் உள்ளே நுழைய முயன்றனர். இதனால், போலீசாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல, ரயில்நிலையத்தை முற்றுகையிட முயன்ற ம.ஜ.க. கட்சியினரை காவல்துறையினர் செய்தனர்.
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க. பெரும்பான்மை வெற்றி பெற்ற மமதையில் இதுவரை இல்லாத அளவு 30 சட்ட மசோதாக்களை நிறைவேற்றி, அதிகார தோரணையுடன் நடக்கிறது. மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், பிற மாநிலங்களில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அரசியல் அவமதிப்புக்கான முன்னோட்டம்," என தெரிவித்தனர்.