கோவை : மத்திய பிரதேசத்தில் எந்தவிதமான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல் மத்திய அரசால் வெளியேற்றப்படும் ஆதிவாசி மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக அங்கு புறப்பட்டு செல்வதாக சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது :- மத்திய பிரதேசத்தில் பர்வாணி என்ற பகுதியில் வசித்து வரும் 30,000 ஆதிவாசி மக்களை, மாற்று ஏற்பாடு செய்யாமல் அப்புறப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு முயற்சி செய்கிறது. ஆதிவாசி மக்களுக்கு ஆதரவு அளிப்பதற்காக நான் அங்கு செல்கிறேன், எனக் கூறினார்.
மேலும், காஷ்மீர் விவகாரம் குறித்து மேதா பட்கர் கூறியதாவது :- காஷ்மீர் மக்கள் ஜனநாயக முறையில் இந்தியாவுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் அம்மக்களிடம் மத்திய கருத்து கேட்டிருக்க வேண்டும். மேலும், வெளி மாநிலத்தவர் காஷ்மீர் பகுதியில் நிலம் வாங்க முடியாத நிலை இருந்தது. தற்போது அரசியல் கட்சியினர் மற்றும் தொழில் அதிபர்கள் வாங்க வழிவகை செய்யப்பட்டு, இயற்கை எழில் கொண்ட இடம் பெரும் முதலாளிகள் வசம் செல்ல வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த செயலின் காரணமாக தங்களது உரிமையை மீட்டெடுக்க அகிம்சை வழியில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. முன்னாள் முதல்வர்கள் மூன்று பேர் வீட்டு சிறை வைக்கப்பட்டது தவறு. மக்களுடன் பேசி நிரந்தர தீர்வு ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும், என்றார்.