மேட்டுப்பாளையம் நகராட்சியில் அனைத்து அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம்

கோவை : பவானி ஆற்று வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கோவை : பவானி ஆற்று வெள்ள பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அதிகாரிகள் கலந்துகொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக, கேரள மாநில எல்லைப் பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பில்லூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 100 அடியை எட்டியது. அணையின் பாதுகாப்பைக் கருதி அணையில் இருந்து வினாடிக்கு 48 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. நேற்று இரவு மட்டும் 88,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நெல்லித்துறை, வனபத்ரகாளியம்மன் கோயில், பவானி பாலம், ஓடந்துறை, சிறுமுகை, கிச்சகத்தியூர் ஆகிய பகுதிகளில் ஆற்று நீர் வீட்டினுள் புகுந்தது. எனவே, அப்பகுதி பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் வருவாய் துறையினர் தங்க வைத்துள்ளனர்.



இந்த நிலையில், வருவாய் துறையினர் சார்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் அனைத்து துறையினர் கலந்து கொண்ட பேரிடர் மீட்பு ஆலோசனைக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் சட்டமன்ற உறுப்பினர் ஒ.கே சின்னராஜ் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் வருகின்ற இரண்டு நாட்கள் அதிக அளவில் மழை பெய்யும் என்று வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதாகவும், இதனால் பவானி ஆற்றில் மேலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதற்கு தகுந்தாற்போல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தாழ்வான இடங்களில் உள்ள பொதுமக்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்றும், தீயணைப்புத் துறை, காவல்துறை பொதுப்பணித்துறை மற்றும் இதர துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், இரவு பகல் பாராமல் கண்காணிப்பில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், வட்டாட்சியர் சாந்தாமணி, மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...