கோவை : கோவை மாநகர பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பல்வேறு இடங்களில் தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால், போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை முதல் மாநகர பகுதிகளில் மிதமான மழை பெய்தது. பிற்பகலில் கோவை மாநகரில் மீண்டும் கனமழை பெய்தது. காந்திபுரம், டவுன்ஹால், ராமநாதபுரம், பீளமேடு, விமான நிலையம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் பெய்தது. தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது.
இதனிடையே, கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றில் 4,650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார். சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலை மற்றும் ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் நொய்யல் ஆற்று தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் சென்று வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாலங்களை தாண்டி செல்லும் வெள்ளத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

சூலூர் அருகேயுள்ள ராவுத்துர் பிரிவு நொய்யல் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், ராவுத்தூர் கிராம பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். செல்வபுரம், ஆத்துப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால், அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, மாதம்பட்டி பாலம் மற்றும் குனியமுத்தூர் அணைக்கட்டு பகுதியில் மழையால் ஆற்றில் நீர் நிரம்பி செல்வதை மாவட்ட ஆட்சித் தலைவர் ராசாமணி நேரில் ஆய்வு செய்தார்.