மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வெள்ளம் சூழ்ந்ததால் இடிந்து விழுந்த வீடுகள் : ஆட்கள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் தவிர்ப்பு

கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் வெள்ளநீர், குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

கோவை : மேட்டுப்பாளையத்தில் பவானி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் வெள்ளநீர், குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன. 



சிறுமுகையில் பவானி ஆற்றினை ஒட்டியுள்ள வச்சினம்பாளையம் அருகே உள்ள குள்ளங்கரை தோட்டம் பகுதியில் மகாலிங்கம், வெள்ளியங்கிரி, ஆறுக்குட்டி, ஆரான் ஆகியோர் தனித்தனியே குடும்பத்துடன் நான்கு வீடுகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் சுமார் 88,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. ஆற்றின் கரையை தாண்டி அங்குள்ள சிறு ஓடை வழியே வெளியேறிய தண்ணீர், இந்த நான்கு வீடுகளுக்குள் நுழைந்தது. உடனடியாக, சுதாரித்து கொண்ட மகாலிங்கம், வெள்ளியங்கிரி மற்றும் இருவர் தங்கள் குடும்ப உறுப்பினர்களை உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேற்றினர். 



இருப்பினும், தொடர்ந்து தண்ணீர் பெருக்கெடுத்து வீடுகளுக்குள் புகுந்ததால் முதலில் அதன் பக்கவாட்டு சுவர்கள் இடிந்து சேதமாகின. பின்னர், அடுத்தடுத்து சுவர்கள் இடிந்து வீடுகள் முழுவதும் நாசமானது. வீடு இடியும் நேரத்தில் சுதாரித்து அனைவரையும் வெளியேற்றியதால் பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டது. மேலும், சேதமடைந்த வீடுகளை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிகபட்டவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சில இடங்களில் மின்கோபுரங்களும் சேதமானதால், அதனை சீர் செய்யும் பணி நடைபெறுவதால் மின்சாரமும் துண்டிக்கபட்டுள்ளது.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...