கோவை : கரும்புக்கடை மற்றும் ஆத்துப்பாலம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் புகுந்துள்ள மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் இடைவிடாமல் பெய்து வரும் கனமழையினால் நொய்யல் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. குறிப்பாக, கரும்புக்கடை மற்றும் ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ராயல் கார்டன், ஆசாத் நகர், நியூ காலனி, மதினா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகள் நீரில் மூழ்கின. இந்தப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் இருந்தவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ஜமாத் இ இஸ்லாமி உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீட்டு, பாதுகாப்பான பகுதியில் தங்க வைத்தனர்.

இது தொடர்பாக, ஜமாத் இ இஸ்லாமி அமைப்பின் செயலாளர் அப்துல் ஹக்கிம் கூறுகையில், "இந்த நிலைக்கு இங்குள்ள குடியிருப்புவாசிகளும், அதிகாரிகளுமே காரணம். நீர் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகள் மற்றும் குப்பைகளினால் அடைக்கப்பட்டுள்ளது. எனவே, தண்ணீர் அதன் வழியில் பாய்ந்தோட முடியாமல் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. ஏன், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் வீடுகளை கட்டினர்..?, நாங்கள் தொடர்ந்து நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு கூடாது என வலியுறுத்திய பிறகும், அரசியல்வாதிகளோ..?, பொதுமக்களோ..? இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை," என்றார்.
இதனிடையே, வெள்ளநீர் புகுந்துள்ள பகுதிகளில் இருக்கும் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.