கோவை : கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக உக்கடம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உக்கடம் - ஆத்துப்பாலம் இடையிலான போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

உக்கடம் - ஆத்துப்பாலம் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. எனவே, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, மாற்றுப் பாதைகளில் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் என தனித்தனியே இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜுன் மாதம் 3-ம் தேதி முதல் உக்கடம் - புட்டு விக்கி சாலை வழியாக பேருந்து, கார்கள் மற்றும் லாரிகள் இயக்கப்பட்டு வருகின்றன. உக்கடம் - ஆத்துப்பாலம் சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோவையில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் தொடர் மழையினால், உக்கடம் - ஆத்துப்பாலம் சாலை மூடப்பட்டுள்ளது. மேலும், புதிய மீன் மார்க்கெட், கரும்புக்கடை, வழியாக ஆத்துப்பாலம் சந்திப்புக்கு செல்லுமாறு இருசக்கர வாகனங்கள் இயக்கப்பட்டு வந்தன. நேற்று மாலை முதல் இந்த சாலைகளும் மூடப்பட்ட நிலையில், மீண்டும் குளத்தை ஒட்டியுள்ள சாலை வழியாக உக்கடம் - ஆத்துப்பாலம் செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.