பவானி ஆற்று வெள்ளப் பாதிப்புகளை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் நேரில் ஆய்வு

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பாதிப்புகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு பாதிப்புகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 



மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள தமிழக - கேரள மாநில எல்லைப் பகுதியில் கடந்த 5 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் உள்ள மேல் பவானி, அவலாஞ்சி, எமரால்டு, குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழையின் தாக்கம் அதிக அளவில் இருந்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் உள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நீர்மின் நிலையத்துக்கு வந்து, அங்கிருந்து பில்லூர் அணைக்கு வந்தடைந்தது. இதேபோல, கேரள மாநிலம் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அப்பகுதியில் இருந்தும் மழைநீர் பில்லூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது. 

இதனால், கடந்த 5 நாட்களாக நிரம்பி வழியும் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூர் அணையில் இருந்து உபரிநீர் பவானி ஆற்றுக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பவானி ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளான வன பத்ரகாளியம்மன் கோயில், நெல்லித்துறை சாமான வாட்டர் ஹவுஸ், பவானி மேம்பாலம் உள்ளிட்ட பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால், பாதுகாப்பு கருதி அங்கிருந்த பொதுமக்கள் மேடான பகுதிகளுக்கு வருவாய் துறையினர் அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இன்று காலை தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கை நேரில் ஆய்வு செய்தார் 

அப்போது அவர் பேசியதாவது :- நீலகிரி மற்றும் பவானி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக பில்லூர் அணை நிறைந்து, மேட்டூர் அணை பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, திடீர் திடீரென அதிகரிக்கும் வெள்ளப்பெருக்கை வருவாய் துறையினர் கண்காணித்து வருகின்றனர். மேலும், வருவாய்த்துறையினர் இரவு பகலாக பவானி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கண்காணித்து வருகின்றனர். முதலமைச்சரின் உத்தரவின் பேரில், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து துறையினரும் தயார் நிலையில் உள்ளனர், என தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது, மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் ஓ.கே. சின்னராஜ், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் நாசர், நகர செயலாளர் வான்மதி சேட் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...