கோவை : மோசமான வானிலை காரணமாக அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்ல வேண்டிய எத்திஹாட் விமானம் கோவை விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

கேரள மாநிலத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சர்வதசே விமானங்கள் வந்து செல்கின்றன. தற்போது, கேரளாவில் கனமழை பெய்து வருவதாலும், விமான ஓடு தளத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் விமானங்களை தரை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், கொச்சின் விமான நிலையம் மூடப்பட்டது. இதனிடையே, கேரள மாநிலத்திற்கு வரும் விமானங்கள் கோவையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டு வருகிறது. கோவையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், கோவை விமான நிலையத்தில் விமானங்களை இறக்குவதில் எந்த சிரமமும் இல்லாமல், வழக்கம் போல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அபுதாபியில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்ல வேண்டிய எத்திஹாட் விமானம் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.