நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையினால் நிகழ்ந்த பல்வேறு விபத்துகளில் தாய், மகள் உள்பட 5 பேர் இதுவரை உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை 8-வது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. காற்றுடன் கூடிய தொடர்மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீடு இடிந்து முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, இன்று நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட இந்திராநகர் பகுதியில் அமுதா (36) மற்றும் அவரது மகள் காவியா (12) ஆகிய இருவரும் வீடு இடிந்து விழுந்து பலியாகினர். அதைத் தொடர்ந்து, காட்டுக் குப்பை பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்தனர். குருத்துக் குளி பகுதியில் வீடு இடிந்து விழுந்ததில் விமலா (38), சுசீலா (36) இருவரும் பலியாகினர்.

தொடர்ந்து, மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இந்த இரண்டு நாட்களில் 5 உயிர்கள் பலியாகி உள்ளன. எனவே, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.