கரைபுரண்டோடும் நொய்யல் ஆற்றினால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல் : இரு தரைப்பாலங்கள் மூழ்கடிப்பு

கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத வகையில் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை : நொய்யல் ஆற்றில் வெள்ளம் வரலாறு காணாத வகையில் கரைபுரண்டு ஓடுவதால், ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக, நொய்யல் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் இரண்டு கரைகளை தாண்டி வெள்ளநீர் செல்லும் அளவிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனிடையே, வெள்ளலூர் - சிங்காநல்லூர் சாலையில் உள்ள நொய்யல் ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கியுள்ளது. பாலத்திற்கு மேலே பல அடி தூரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால், சிங்காநல்லூர் - வெள்ளலூர் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் சுற்றி மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாலத்திற்கு மேலே தண்ணீர் செல்வதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதேபோல, ஒண்டிப்புதூர் - பட்டணம் சாலையில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியுள்ளது. இரண்டாவது நாளாக அச்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகன ஒட்டிகள் பல கிலோ மீட்டர் சுற்றி நகருக்குள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, கோவையில் பெய்யும் கனமழையின் காரணமாக, நொய்யல் ஆற்றில் 4,650 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் பாட்காஸ்ட் ஸ்டுடியோ திறப்பு

கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சென்ட்ரல் பள்ளியில் ஸ்கில் லேப் மற்றும் வோக்ஸ் வேவ் பாட்காஸ்ட் ஸ்டுடியோ இன்று திறக்கப்பட்டது....

கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து அமைச்சர் சம்பத்குமார் தலைமையில் கலந்தாய்வு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி.சம்பத்குமார் தலைமையில் கோயம்புத்தூர் மாநகராட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கலந்த...

ஒண்டிப்புதூர் ABC மையத்தையும் உக்கடம் கழிவுநீர் சேகரிப்பு மையத்தையும் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இன்று ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள வீடில்லா நாய்களுக்கான ABC மையத்தையும...

பேரூர் குளத்தில் 449-வது வார தூய்மைப் பணி - பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

கோவை பேரூரில் WWF-India மற்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு இணைந்து 449-வது வார தூய்மைப் பணியை ஜூன் 28 அன்று காலை 7...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...