நீலகிரி : நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கனமழையினால் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் சிறுமி உள்பட இருவர் உயிரிழந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய தென்மேற்கு பருவமழை 8-வது நாளாக தொடர்ந்து இன்றும் இடைவிடாமல் பெய்து வருகின்றது. காற்றுடன் கூடிய தொடர்மழை காரணமாக ஆங்காங்கே சாலை ஓர மரங்கள் விழுந்து வருவதால் போக்குவரத்தில் அவ்வப்போது பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்த நிலையில், நடுவட்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட இந்திராநகர் பகுதியில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்தது. இதில், வீட்டினுள் இருந்த அமுதா (36), காவியா (12) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும், லோகேஷ் (12) என்ற படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, சம்பவ இடத்தில் மீட்புப் பணி குழுவினர் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.